ப்ளூடூத் ஸ்பீக்கரில் பயணித்த ஐஸ் போதைப்பொருள்

ப்ளூடூத் ஸ்பீக்கரில் (Bluetooth speaker) மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்/ .

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் துபாயில் மறைந்து வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உறவினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.