எதிர்க்கட்சித் தலைவருக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் விஷேட சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும் அதிலிருந்து மீள்வது குறித்தும் நோர்வே தூதுவருக்கு தெரியப்படுத்தியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இந்நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டு எனவும் முக்கியமான தேர்தல் நடைபெறும் எனவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய படுமோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கம் தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டுவர ஐக்கி்ய மக்கள் சக்தி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எரான் விக்ரமரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.