அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி விபத்து

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்துடன் நேருக்கு நேர்  மோதி  விபத்திற்குள்ளாகின.

இதன் போது குறித்த விபத்தில் மாணவர்கள் உட்பட  23 பேர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை பொது  வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக  அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளி முன்னெடுத்து வருகின்றனர்.