ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பத்தரமுல்லையில் உள்ள தலைமை காரியாலயமும், மட்டக்களப்பு, வவுனியா, நுவரெலியா, காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களும் இன்று காலை 8.30 முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.