இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய் மூலம் எண்ணெய் – திட்டம் விரைவில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்திருந்தனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது திறந்துவைக்கப்பட்டது. இதன்போதே இக்கருத்து இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.