பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்குதல் ஒன்றில் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை கொண்டிருந்தமையினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் கணவரான இராணுவ சிப்பாய் ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரான இராணுவ சிப்பாய் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.