கல்முனையில் பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது.

தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த தலைமைத்துவ பயிற்சி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் முரசொலிமாறன் தலைமையில் இடம்பெற்றதுடன் நற்பிட்டிமுனை பெண்கள் அபிவிருத்தி மன்ற ஸ்தாபக தலைவி சந்திரிகா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

அதிகாரம் வழங்குவதன் மூலம் பெண்களை பரந்த சமூக செயற்பாடுகளில் ஒன்றிணைத்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பயிற்சியின் வளவளராக அன்பழகன் குரூஸ் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பெண் தலைமைத்துவவாதிகள் ,பெண் கலைஞர்கள்,பெண் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.