மருமகனால் மாமன் கொலை

வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீது மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு காெண்டு செல்லப்பட்ட செல்லப்பட்ட நிலையில் முன்னதாக உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை மாேகன் என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற  சிதம்பரபுரம் பாெலிசார் இச்சம்பவம் தாெடர்பில் விசாரணைகளை மேற்காெண்டு வருகிறார்கள்.