காணாமல்போன சிறுவன் கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் உருக்கம்.

சாமிமலை சின்ன சோலங்கந்தை தோட்டத்தில் வசிக்கும் அழகர்சாமி புண்ணியமூர்த்தி தம்பதிகளின் மகன் (வயது 15) சதூர்ஷன் தனது வீட்டில் இருந்து மஸ்கெலியா நகருக்கு கடந்த 28 ம் திகதி முடி வெட்ட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

அவரை தேடும் பணியில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சிறுவனைக் கண்டவர்கள் உடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்லது அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் அறியதருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பொலிஸ் நிலையம் 0522277222.
தந்தை – 0758917799 / 0786284730.

குறிப்பு இந்த சிறுவன் மஸ்கெலியா புளும்பீலட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 கல்வி பயிலும் மாணவன் ஆவார்.

தகவல்
தந்தை
அழகர்சாமி புண்ணியமூர்த்தி.