ஹிருணிகாவிற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.