பசு கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் – உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு

புங்குடுதீவில் மோட்டார்சைக்கிளில் பசுவொன்றினை இறைச்சியாக்கும் நோக்கில் கடத்திச்சென்ற இருநபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் .

தலா 25000 ரூபாய் அபராதத்துடன் கடுமையான எச்சரிக்கையோடு இரு நபர்களும் விடுவிக்கப்பட்டதோடு இக்குற்றச்செயலை காணொளியாக எடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியதோடு அப்பசுவினை உயிரோடு காப்பாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

மேலும் இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தீவுப்பகுதி வாழ் மக்கள் துணிந்து செயற்பட்டு பொலிசாருக்கு ஒத்துழைக்கவேண்டுமென்றும் அவர்களுக்குரிய பாதுகாப்பினை எந்நேரமும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி விதான பத்திரன தெரிவித்துள்ளார் .

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த இருநபர்கள் நான்கு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பசுவொன்றினை மோட்டார்சைக்கிளில் ( NP GQ 1025 ) கடத்தி இறைச்சியாக்கும் நோக்கில் கொண்டுசெல்லும்போது ஊர் நலன்விரும்பும் இளைஞர்களால் மறிக்கப்பட்டு காணொளி எடுக்கப்பட்டதோடு உடனடியாக பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

செய்தி தொடர்பான காணொளி https://fb.watch/rXigSUgbd_/