மனித கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ மேஜர் கைது

இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய யுக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மனித கடத்தலில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யாவில் இராணுவ சேவைக்கு அனுப்பியமை தொடர்பில் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.