சம்பள உயர்வுக்கு அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை – ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த வருடத்தில் அவற்றை பரிசீலிக்க அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றய ஜனாதிபதியின் விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருமித்த கருத்துடன் முன்னோக்கிச் சென்றால் தான் நாம் தலைதூக்க முடியும்.தனிப்பட்ட இலக்குகளுக்குச் சென்றால் அது அழிவின் ஆரம்பமாக அமையும்.அத்துடன் பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.