ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நியமணம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மைத்திரிபால சிறிசேன தரப்பின் செயற்குழு கூட்டம் இன்று காலை கோட்டையில்  உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்தார்.மேலும் செயற்குழு கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை கட்சியின் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.