க.பொ.த தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே  இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார்.

இந்நிலையில் குறித்த முதியவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.