நமக்கென்றொரு பெட்டகம் – அறிமுகமும் கலந்துரையாடலும்…

ஈழத்து நூல்களின் பதிப்புகள் குறித்தும் பரவுகை குறித்தும் முதன்மையான அக்கறையுடன் செயற்பட்டுவரும் ‘எங்கட புத்தகங்கள்’ வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூல் பற்றிய அறிமுகத்தின் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் சமகாலத் தேவைகள் குறித்த உரையாடல்கள் குறித்து விதை குழுமம் தனது அறிமுகமும் உரையாடலும் என்கிற தொடர்நிகழ்வின் மூன்றாவது நிகழ்வாக ஒருங்கிணைத்த இணையவெளிக் கலந்துரையாடல் 12.09.2021 அன்று நடைபெற்றது. 
 
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் நூலகர் கலாநிதி. திருமதி. கல்பனா சந்திரசேகர், விதைகுழும செயற்பாட்டாளர் திரு. அருண்மொழிவர்மன் ஆகியோர் மேற்குறித்த புத்தகம் பற்றிய தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும் குறித்த நிகழ்வில் புத்தகத்தின் ஆசிரியரும் நூலியலாளருமான திரு. என். செல்வராஜா அவர்கள் “கிராமிய நூலகங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வினை விதைகுழும செயற்பாட்டாளர் திரு. கிரிசாந் ஒருங்கிணைத்திருந்தார்.
 
இந்தஉரைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் கிராமங்களில் நூலகங்கள் பண்பாட்டு வெளியாக இயங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவ்வாறு அமையவேண்டியதன் அவசியம் குறித்ததுமாக அமைந்தது, ஆக்கபூர்வமாகவும் நேர்மறைத்தன்மையான விமர்சன பூர்வமாகவும் அமைந்த இந்த உரையாடலில் கிராமிய நூலகங்களை உருவாக்குவதில், கொண்டுநடாத்துவதில் இருக்கக்கூடிய சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், பொறிமுறைகள் என்பன பற்றியதாக இந்தக் கலந்துரையாடல் விரிந்து சென்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.