காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினமும் விழாவும்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினமும் விழாவும் காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 27.11.2021 சனிக்கிழமை,இன்று காலை 9.00 மணிக்கு,காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களின் தலைமையில், இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக விபுலானந்தரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து
நந்திக்கொடியேற்றல், அறநெறிக் கீதம்,மங்கள விளக்கேற்றல் குருபூஜை வழிபாடுகளோடு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் அவர்கள் திருமுன்னிலை வகிக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு,வே.ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தனர் மேலும்
இந்த நிகழ்விலே, ஆன்மிக அதிதிகளாக காரைதீவு ஸ்ரீ நந்தவனச் சித்திவிநாயகர் ஆலய சிவஸ்ரீ இ.மகேஸ்வரக் குருக்கள், காரைதீவு, ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலய சிவஸ்ரீ சி.சாந்தரூபன் குருக்கள், பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சிவஸ்ரீ ந.பத்மலோஜன் சர்மா, நாவிதன் வெளி ஸ்ரீ முருகன் ஆலய சிவஸ்ரீ சுபாஸ்கர் சர்மா அவர்களும் சிறப்பு அதிதிகள், விஷேட அதிதிகள், பிரதேச கலாசார உத்கியோகத்தர்கள், ஆறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்எனப் பலரும்கலந்து சிறப்பித்தனர்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை வரவேற்பு நடனமாக ஆறநெறிப்பாட சாலை மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி அவர்களின் வரவேற்புறையைத் தொடர்ந்து அதிதி உறை, நாவலர் பெருமானின் இக் குருபூஜை நிகழ்விலே மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வுகளும் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் அதிதிகளினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நன்றியுரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீபிரியா கங்கைநாயகன் அவர்களும் நிகழ்த்தினார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்