August 14, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று  ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 ஆவது சிங்க றெஜிமென்ட படையணி ...

மேலும்..

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு ...

மேலும்..

ஆட்ட நிர்ணய விவகாரம் : சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை !

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று செஞ்சோலை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர். இதனையடுத்து செஞ்சோலை ...

மேலும்..

அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைகளுக்கு ழககள் பிரதிநிதிகள் ...

மேலும்..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அந்தவகையில் காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்  தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன்  தேரில் உள்வீதியுலா வந்து  பக்தர்களுக்கு ...

மேலும்..

பிறந்ததும் தவறி கீழே வீழ்ந்து இறந்த சிசு

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ...

மேலும்..

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

தமிழரின் தலையைக் கொய்து வருவேன்” எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் ...

மேலும்..

இலங்கையில் சுரங்கத்துக்குள் உருவாக்கப்பட்டுள்ள உணவகம்

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதி உள்ளதாக போகல காரீய சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார். மேலும், ...

மேலும்..

நாவலடிக் காணிகளில் இருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை இனவாத நடவடிக்கை! ஹரீஸ் எம்.பி. கண்டனம்

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும், குடியிருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றமை இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் நன்றாக தெரியும். மட்டக்களப்பு வாழ் முஸ்லிங்களின் ...

மேலும்..

மாமாங்கேஸ்‌வரருக்கு செல்லும் பக்தர்களிடம் வாகனதரிப்பிட கட்டணம் அதிகமாக அறவீடு! கிழக்கு ஆளுநரிடம் பக்தர்கள் முறைப்பாடு

  மட்டக்களப்பு மாமாங்கேஸ்‌வரர் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் என்றுமில்லாதவாறு வாகன தரிப்பிட கட்டணமாக அதிக பணம் அறவிடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ...

மேலும்..

சாய்ந்தமருதுக்குப் பெருமை சேர்த்த கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

  நூருல் ஹூதா உமர் கலாசார அலுவல்கள் அமைச்சால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தப் போட்டிகளில் ...

மேலும்..

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் என்றால் இணைந்த வட -கிழக்கில் முஸ்லிங்களின் நிலை என்ன? கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்

  நூருல் ஹூதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13 ஆம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் ...

மேலும்..

ஜம் இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்! முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

  நூருல் ஹூதா உமர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸூடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை பள்ளி வீதியில் ...

மேலும்..

யாழ். வாலை அம்மன் சனசமூகநிலைய 80 ஆவது ஆண்டு நிறைவு அமுத விழா!

  யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூகநிலைய 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாலை அம்மன் சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள் வருகையோடு இரண்டு நாள்களும் வெகு சிறப்பாக இடம்பெற்றது . அமுத விழா நிகழ்வின் போது, ...

மேலும்..

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்;! கண்ணீரில் தோய்ந்தது வள்ளிபுனம்

  விஜயரத்தினம் சரவணன் செஞ்சொலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் முகாமைத்துவ கற்கைநெறியில் ஈடுபட்டிருந்த ...

மேலும்..

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியே மேர்வின் சில்வா! அனந்தி சசிதரன் கடும் காட்டம்

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே மேர்வின் சில்வா காணப்படுகின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - நான் வடக்கு, கிழக்குக்கு ...

மேலும்..

இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு சரிசமமாக வாழ்வதற்கான போராட்டமே மலையக எழுச்சி பவனி!  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ருவிட்

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக உள்ளது என்பதை தான் நினைத்துப் பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தரம் 10 இல் நடத்த நடவடிக்கையாம்! கல்வி அமைச்சர் சுசில் கூறுகிறார்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிவரும் காலங்களில் மேற்கொள்ள இருக்கும் கல்வி ...

மேலும்..

தமிழர்களுக்கு எதிரான மேர்வின் சில்வாவின் கருத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்! சமூக ஊடகங்களில் சீற்றம்

தமிழர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் உரையாற்றும் வீடியோ  ஊடகமொன்றின்   செய்தியில் வெளியாகியுள்ளது. விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் என அதில் மேர்வின் சில்வா தெரிவிப்பதைக் காணமுடிகின்றது. மேர்வின் சில்வாவின் இந்த ...

மேலும்..