நுவரெலியா கோட்டா கோ கமவில் வெசாக் கொண்டாட்டம்

 

(டி.சந்ரு, செ.திவாகரன்)

 

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப் போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா – பதுளை வீதியில் பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக நுவரெலியாவில் உருவாக்கப்பட்ட ‘கோட்டா கோகம’வில் மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பை நினைவுபடுத்தி வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் தன்சல் நிலையங்கள் அமைக்கப்பட்டும் பக்தி கீதங்கள் ஒலிரவிடப்பட்டும் வெசாக் பண்டிகை முன்னெடுக்கப்பட்டது.

இங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு கோப்பி, டீ மற்றும் உணவு பரிமாறப்பட்டு

பல்வேறு நிகழ்வுகளுடன் நுவரெலியா கோட்டா கோ கம களை கட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.