ஆதரவளியுங்கள் – பிரதமர் உதயகம்மன்பிலவிற்கு கடிதம்

 

முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பிலவின் ஆதரவை கோரியுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அமைப்பு முறை மாற்றத்திற்கே மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு உதயகம்மன்பிலவும் அவரது கட்சியும் ஆதரவளிக்கவேண்டும் என பிரதமர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதயகம்மன்பில அங்கம் வகிக்கும் பத்து கட்சிகளும் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளன.

எனினும் அரசாங்கத்தின் சாதகமான நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்போம் என அவை குறிப்பிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்