எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்காதீர்கள் – அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன – காஞ்சன விஜயசேகர 

 

 

எரிபொருட்களுடன் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டுவாரத்திற்குள்ள வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சனவிஜயசேகர மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அடுத்த இரண்டுவாரத்திற்குள் மூன்று கப்பல்கள் எரிபொருட்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் இந்திய கடனுதவி மூலமே இந்த எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தக் கப்பல்கள் வந்ததும் போதியளவு எரிபொருட்கள் மக்களிற்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

நேற்று டீசல் கப்பல் வந்துள்ளது. இந்திய கடனுதவியுடன் பெறப்படும் கப்பல்கள் அடுத்த இரண்டுவாரமளவில் வரவுள்ளன அதன் பின்னர் போதுமான எரிபொருள் கிடைக்கும் இதன்காரணமாக மக்கள் அடுத்த மூன்று நாட்களிற்கு வரிசையில் நிற்கவேண்டியதில்லை பதற்றமடைந்து எரிபொருளை கொள்வனவு செய்யவேண்டியதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்