இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள்

இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள

 

இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகின்றன.

ஜனாதிபதி 20 அமைச்சர்களையும் 30 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜனபெரமுனவை சேர்ந்த- சுயாதீன கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன- என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்களிற்கு வழங்கப்படவுள்ள அமைச்சரவை பதவிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

நீதி அமைச்சர் விவசாய அமைச்சர் போன்ற பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சராக பிரதமரே பதவி வகிப்பார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்