எமது மாவட்ட அரசியல்வாதிகள் மக்களின் அவல நிலையினை தாமாக உணராதவரை மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை… (ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – வ.சுரேந்தர்)

சுமன்)

எமது மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் அவல நிலையினை தாமாக உணராதவரை மக்களுக்கு விடிவு வரப்போவதுமில்லை அவர்களது  எதிர்கால இருப்பும் உறுதியாகப் போவதுமில்லை என ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்தர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கோட்டா கோ கம போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர் இருந்தால் தான் உரிமைக்காக போராட முடியும் அந்த உயிரை தக்க வைத்து கொள்வதற்கு நாம் மக்கள் படும் துயரம் வர்ணிக்க முடியாதது. உண்ணும் உணவில் இருந்து போக்குவரத்திற்கான எரிபொருள் வரை அதை பெற்றுக்கொள்வதற்காகவே ஒரு நாளில் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் வரிசையில் நின்று போராட வேண்டியுள்ளது. அதிலும் எமது உழைப்பின் மூலம் பெறப்பட்ட ஊதியத்தினாலே ஆகும். ஆயினும், அன்றாடம் உழைக்கும் தொழிலாளிகள் இவ்வாறு வரிசையில் காத்திருக்க முடியாமா? காத்திருந்தால் அன்று அவர்களின் வீட்டு அடுப்பு எரியுமா? இந்த அவல நிலையை யாரிடம் மக்கள் கூறுவது?

இந்த நிலையை எமது அரசியல் வாதிகள் உணர்வார்களா? அல்லது உணர்த்தினாலும் செவி சாய்ப்பார்காளா? என்பது சந்தேகமாகவே உள்ளது. காரணம் மக்கள் உணவின்றி இறந்தாலும் கவலைப்படாத எமது பிரதேசத்தை சார்ந்த அரசியல்வாதிகள் தம் அமைச்சு பதவிகளை பெறுவதிலேயே கூறியாக உள்ளார்கள்.

இன்றைய தேவை அடிப்படை உரிமை அல்ல அடிப்படை தேவையே ஆகும். ஆனால், வெறுமன அமைச்சு பதவிகளும் இராஜகௌரவங்களும் அவசியமற்றதாகும். அரசியலில் மூதிர்ச்சியடைந்த, அரசியல் இருப்பை இஸ்திரப்படுத்திய அரசியல் தலமைகள் கூட சிரேஷ்ட அமைச்சர்கள் தனது பதவிகளை துறந்து மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போறாடுகிறார்கள். ஆனால் அரசியல் இருப்பு உறுதியாக நிலையில் உள்ளவர்கள் கூட அமைச்சு பதவிக்காக கொழும்பில் காத்து கிடக்கும் இவர்களா மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் எடுக்க போகின்றார்கள்.

பால்மா, மருந்துப் பொருட்கள், சீமேந்து, எரிபொருள், பசளை, கேஸ், மின்சாரம் போன்ற மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துக்கொண்டு செல்கின்றதே தவிர குறைந்த பாடில்லை. இது நீடிக்குமானால் ஒரு கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கு மூல காரணம் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையாகும். இதனை தட்டி கேட்க அல்லது குரல் கொடுக்க எமது மாவட்டத்தில் மக்கள் நலனைபேணும் ஒரு அரசியல்வாதி இல்லை என்பது சாபக்கேடாகும். உதாரணமாக எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் மக்களை நேரில் யாதேனும் ஒரு அரசியல்வாதி சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு இருக்கின்றாரா அல்லது அதற்கான தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளாரா?

எமது மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் அவல நிலையினை தாமாக உணராதவரை மக்களுக்கு விடிவு வரப்போவதுமில்லை அவர்களது எதிர்கால இருப்பும் உறுதியாகப் போவதுமில்லை என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.