முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வற்றாப்பளை அம்மனும் சாட்சி – ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்
மே.18

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நந்திக்கடல் மாத்திரமல்ல, வற்றாப்பளை அம்மனும்கூட சாட்சியாக உள்ளதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி, 18.05.2022இன்றையநாள்  முல்லைத்தீவு – வற்றாப்பளை அம்மன் கோவில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது தமிழ் இனத்தின் மீதான மிகப்பெரியதொரு படுகொலை, முள்ளிவாய்கால் படுகொலையாகும்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட எமது உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி மேற்கொண்ட பின்னர், வற்றாப்பளை கண்ணகி அம்மன்  கோவிலில் வழிபாடுகளையும் மேற்கொண்டேன்.

ஏன் எனில் முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்குச் சாட்சியாக நந்திக்கடல் மாத்திரமல்ல, வற்றாப்பளை அம்மனும் சாட்சியாக இருக்கின்றது.

மேலும் முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து உறவுகளுக்காகவும் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்