வெசாக் தினத்தில் 150மதுபான போத்தல்கள்,168பியர் ரின்கள் மீட்பு-சாவகச்சேரி மதுவரித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

வெசாக் விடுமுறை தினத்தில் விற்பனை நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினர் 15/05 ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளனர்.
உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் ஆலோசனைக்கு அமைவாக, சாவகச்சேரி மதுவரிப் பொறுப்பதிகாரி ஆ.ராஜ்மோகனின் வழிநடத்தலில்,மதுவரி சார்ஜன் மேஜர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கைதடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை மீட்டிருந்தனர்.
இதன்போது 180மில்லிலீட்டர் கொள்ளளவுடைய 150சாராயப் போத்தல்கள்,500மில்லிலீட்டர் கொள்ளளவுடைய 168பியர் ரின்கள் ஆகியன மீட்கப்பட்டதுடன்-சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 20/05 வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்