முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 18.05.2022இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, அக வணக்கத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து முள்ளிவாய்கால் பிரகடனம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வெளியிடப்பட்டது.

அதனையடுத்து உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.