பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு ஏனைய 6 பேருக்கும் பொருந்தும்

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு அவருடன் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபேர்ட்ஸ் பயஸ், சாந்தன் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும் என இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸ் கூறியுள்ளார்.
ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வெவ்வேறு தீர்ப்பை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் இருந்த காலப்பகுதியில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸூக்கு பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வெவ்வேறு தீர்ப்பை வழங்க முடியாது. இவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அப்படி நடக்காததால் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்துள்ளது எனவும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் தெரிவித்துள்ளா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.