முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்