மதுபானங்களின் விலையில் மீண்டும் மாற்றம்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபான விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெல்வத்தை சீனி நிறுவனம் உற்பத்தி செய்யும் எதனோலின் விலை 700 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு நிறுவனமும் இதன் விலையை அதிகரித்திருக்கிறது.
எதனோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளின் விலை 200 வீதத்தினால் அதிகரித்து இருப்பதனால் எதனோலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்