முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள்….

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே இவ்வாறு முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் இவ்வாறு தங்களது முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முன்பதிவு செய்தவர்கள் அதனை இரத்து செய்திருப்பது நாட்டிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்