எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது -லிட்ரோ…

எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது -லிட்ரோ…..
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (19) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு கப்பலுக்கான பணம் செலுத்தப்பட் டுள்ளதாகவும், கப்பலில் உள்ள எரிவாயு இருப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடல் கொந்தளிப்பு காரணமாக எரிவாயு தரையிறக்கம் தடைப்பட்டுள்ளதுடன், சில நாட்களில் தரையிறக்கும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்