மினுவாங்கொட குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைஅச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரசன்ன ரணதுங்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

மினுவாங்கொட குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைஅச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரசன்ன ரணதுங்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தங்களை அச்சுறுத்துகின்றனர் என மினுவாங்கொடையிலும் குருநாகலிலும் கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை குழப்பும் முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என மினுவாங்கொடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பொல அலுவலகம் மினுவாங்கொடையிலேயே அமைந்துள்ளது-நாங்கள் எங்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தோம் ஆனால் எங்களால் இந்த பகுதியில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது கடினமாக உள்ளது ஒவ்வொரு நாளும் பொதுஜனபெரமுன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை தொந்தரவு செய்கின்றனர் – ஆர்ப்பாட்டங்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்- அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும 9 ம் திகதி பொதுஜனபெரமுனவிற்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடவில்லை ஆனால் அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தப்போகின்றனர் என்பது தெளிவாகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
காடையர்கள் கும்பல் இந்தப் பகுதியில் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களிற்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது. இதனைத் தடுக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் முயல்கின்றோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட மேயர் நெய்ல் ஜெயசேகர ஆர்ப்பாட்டக்காரர்களையும் அவர்களிற்கு ஆதரவளித்த சில கடைகளையும் அந்த பகுதியிலிருந்து அகற்ற விரும்புகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் எங்களை இங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். எங்களின் நடவடிக்கைகளால் புற்களிற்கு சேதம் ஏற்படும் இந்தப் பகுதியை மீள கட்டியெழுப்ப 4 மில்லியன் தேவைப்படும் என மேயர் குறிப்பிட்டார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளை குருநாகல் ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்கொள்கின்றனர்.
மோர்னிங்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்