கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலை மாணவர்கள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலை மாணவர்கள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு
கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி, சதம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை உட்பட சில வீதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்துக்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்துக்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) எதிர்ப்புப் பேரணியானது கொழும்பு தாமரைத் தடாகத்துக்கு அருகில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமானது.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்