இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியுள்ளது” – உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன்.

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியுள்ளது” – உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன்
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பதாகவும் இது இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தானது என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து பழநெடுமாறன் கூறியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல் விடுகிற பிரச்சினையாக உருவெடுத்து விட்டது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிற தெற்காசிய நாடுகளுக்கும் ஆபத்தானது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைத்த அந்த கூட்டணியில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி, குவாட் மூலமாக இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
May be an image of 1 person, beard and eyeglasses

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.