இன்று 45,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் – லிட்ரோ…

 

45,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலில் சாதகமான காலநிலை நீடித்தால் மாத்திரமே கப்பலில் இருந்து கெரவலப்பிட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு மிதவைகள் ஊடாக எரிவாயுவை கொண்டு செல்ல முடியும் என லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 3.5 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் காலியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள குடிமக்களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்