பணம் செலுத்தியதைத் தொடர்ந்து எரிபொருளை இறக்க நடவடிக்கை – CPC..

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.சி முன்பதிவுச் செய்த கப்பலில் இருந்து பெற்றோல் இறக்கும் பணி நேற்றிரவு தொடங்கியதாக CPC தலைவர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன்,டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்