ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு இல்லை!

2021 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் மற்றும் நீர் வளங்களை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

மே மாதம் 21, 22 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாலை 6 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என PUCSL மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்