யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது
ஸ்ரான்லி வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமே இவ்வாறு அழிவடைந்துள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபை தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
தீ பரவத் தொடங்கியபோது விற்பனை நிலையத்துக்குள் கடையில் பணியாற்றும் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தாகவும் சம்பவத்தில் தீப் பற்றிய நிலையில் உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேறி ஓடியதால் சிறிய காயங்களுடன் தப்பிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
May be an image of fire and outdoors

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்