பாதுகாப்பு அமைச்சர் பதவியை கைவிட விரும்புகின்றார் ஜனாதிபதி

பாதுகாப்பு அமைச்சர் பதவியை கைவிட விரும்புகின்றார் ஜனாதிபதி
15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார்.
வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை பிரதமருக்கு தெரிவித்தார்.
21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதிபதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஸ் பத்திரனவிற்கு வழங்க முன்வந்தார்,ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை – அதன் பின்னரே அவர் அமைச்சராக பதவியேற்றார்.
அவரது மனதை மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன-அதனை அவர் ஏற்கவிரும்பாவிட்டால் இன்னொரு தெரிவை மேற்கொள்ளவேண்டும் என அவை தெரிவித்தன
பிரதமர் தொடர்ந்தும் நிதிவிவகாரங்களை கையாள்கின்ற போதிலும்,வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய சுப்பர் அமைச்சொன்றை ஏற்படுத்தும் திட்டம் காணப்படுகின்றது –நிதியமைச்சும் இதற்குள் உள்ளடக்கப்படும்.
May be an image of 3 people and people standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.