ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் புதிய அரசாங்கத்தில் இணைகின்றார்?

ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் புதிய அரசாங்கத்தில் இணைகின்றார்?
புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க நாட்டிற்காக உழைப்பதற்கான வாய்ப்பாக அதனை பயன்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
எனக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் நான் கட்சியிலிருந்து வெளியேற தயாரில்லை ஆனால் நாட்டிற்காக உழைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை பின்பற்ற தயார் கட்சியின் நிலைப்பாடுகளில் இருந்து விலகமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடுமோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன, தாங்கள் வழங்கியுள்ள நிதி உதவியை பயன்படுத்தி இலங்கைமருந்துகளை பெறுவதற்கு உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன அனுமதி வழங்கியுள்ளமை சிறந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரதமர் சிறப்பாக செயற்பட்டுள்ளார் எனவும் மயந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person and standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.