முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு!

முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ள னர்.
முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்படும் அதே வேளை மேலதிகமான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபா அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்தார்.
பயணக் கட்டண உயர்வு போதுமானதாக இல்லாவிட்டாலும், பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டு, தங்கள் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
நிலைமையை அவதானிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
May be an image of outdoors and tree

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.