செப்டெம்பரில் அரிசி கையிருப்பு தீரும்
நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என, பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் குழு கூடிய போதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் மாதாந்த அரிசி தேவை 200,000 மெற்றிக் தொன் எனவும், தற்போதைய அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் குழு தெரிவித்துள்ளது
கருத்துக்களேதுமில்லை