வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 இலங்கையர்கள் கைது

திருகோணமலை கடற்கரையூடாக வெளிநாடொன்றிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 முச்சக்கரவண்டிகள், கெப் வாகனம் மற்றும் வான் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 45 ஆண்களும், 7 பெண்களும், 3 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆட்கடத்தல் காரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களையும் கடற்படையினர், பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.