புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பபு

நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்லர், உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்