திரிபோஷா உற்பத்தி நிறுத்தம்: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள், குழந்தைகள்

திரிபோஷா உற்பத்தி நிறுத்தம்: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள், குழந்தைகள்
தானிய தட்டுப்பாடு காரணமாக அரசுக்குச் சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
திரிபோஷா என்பது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியாகும்.
சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் சோளம் அறுவடை செய்யப் பட்டவுடன் புதிய இருப்புகளை உற்பத்தி செய்ய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்வதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் செயலாளரான வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்தார்.
May be an image of 3 people and food

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்