பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

பேருந்து கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தற்போது 27 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ மற்றும் ஐஓசி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை அதிகரித்ததன் காரணமாகவே பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்