40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன

40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன
பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்தார்.
அதன்படி இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் ஓடர்களும் ரத்து செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான மிரட்டல் மற்றும் கட்டுக்கடங்காத நடத்தைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக நாவோதுன்ன மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற பொதுமக்கள் ஆதரவு அளிக்காவிட்டால், மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
May be an image of 1 person and car

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.