மேல் மாகாணத்துக்கு வெளியே முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 120 ரூபா அதிகரிப்பு!

மேல் மாகாணத்துக்கு வெளியே முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்120ரூபா அதிகரிப்பு!
மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 120 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் அமுலுக்கு வந்த எரிபொருள் விலையேற்றத்தால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் ஊடக மற்றும் பிரசாரச் செயலாளரான கபில கலாபிட்டகே தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 100 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டதாகவும், அதன் பின்னர் மேல் மாகாணத்தில் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிச் சேவையில் 900,000 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
குறிப்பாக மேல் மாகாணத்துக்கு வெளியே மலையகப் பிரதேசங்களில் எரிபொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாகவும், எனவே ஒரு கிலோமீற்றருக்கு மாற்று கட்டண வீதத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
May be an image of outdoors and tree

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்