இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள்

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள்
இலங்கையில் மக்கள் மின்சாரதுண்டிப்பு உட்பட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள தருணத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுகுறித்து அவுஸ்திரேலிய வீரர்கள் கரிசனை வெளிpயிட்டுள்ளனர்.
எனினும் அடுத்த மாத சுற்றுப்பயணம் குறித்து அதிகாரிகள் எடுக்கும்தீர்மானத்தை ஆதரிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் எனஅவுஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடி அரசியல் குழப்பநிலை ஆகியவற்றில் சிக்குண்டுள்ள தருணத்தில் அவுஸ்திரேலிய அணியினர் அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிகுந்தவையாக மாறிய பின்னர் இலங்கை அவசரகாலசட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது எனினும் அது நீக்கப்பட்டுள்ள போதிலும் பணவீக்கமும்,முக்கிய வளங்களின் தட்டுப்பாடும் பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதுகாப்பான விடயம் என்ற உத்தரவாதம் கடந்த வாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கிடைத்துள்ளது.
பாக்கிஸ்தானில் வன்முறைகள் இடம்பெற்றபோதிலும் அந்த நாட்டிற்கு 24 வருடங்களிற்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படாதது இலங்கை சுற்றுப்பயணம் குறித்து வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இலங்கை மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் அந்த நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட செல்வதின் தார்மீக தன்மை குறித்து சில வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உதாரணத்திற்கு தொடர்ச்சியாக மி;ன்சாரம் துண்டிக்கப்படும்நாட்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி20 மின்ஒளியின் கீழ் விளையாடப்படவுள்ளது.
குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கும் கிரிக்கெட் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணிசெல்லவேண்டியுள்ளது.
சில வீரர்கள் கரிசனை கொண்டுள்ளது குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எனினும் வீரர்கள் எவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டாம் என தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை நிலைமை குறித்து வீரர்கள் நன்குஅறிந்துள்ளனர்- இலங்கை மக்கள் உணவு எரிபொருள் மின்சாரம் போன்றவற்றினை பெறுவதற்கு பலத்த சிரமத்தினை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களின் நிலைக்கு மாறாக அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து மனக்குழப்பம் காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதமநிறைவேற்று அதிகாரி டொட் கிறீன்பேர்க் தெரிவித்துள்ளார்.
எனினும் எங்கள் வீரர்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகின்றனர் அவர்கள் சுற்றுப்பயணம் குறித்து எங்களது வழிகாட்டுதல்களை ஆலோசனையை பெற்றுக்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.