பாடசாலை வேன் சேவையை முன்னெடுப்பது சிரமம்: டீசல் சலுகையை வழங்குமாறு கோரிக்கை
பாடசாலை வேன் சேவையை முன்னெடுப்பது சிரமம்: டீசல் சலுகையை வழங்குமாறு கோரிக்கை
வேன் சாரதிகளுக்கு டீசல் சலுகையை வழங்குமாறு அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவர்கள் ஈட்டும் வருமானம் அவர்களுக்கு ஏற்படும் எரிபொருள் செலவுக்கு போதும் என சங்கத்தின் செயலாளரான லலித் சந்திரசிறி தெரிவித்தார்.
அனைத்து விலை உயர்வுகளும் நள்ளிரவில் நடைபெறும் என்றும், புதிய பிரதமரின் நியமனத்தின் மூலம் இந்த போக்கு மாறும் என அவர்கள் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னைய டீசல் விலை உயர்வுடன், எரிபொருள் செலவை ஈடுகட்ட பாடசாலை வேன் கட்டணத்தை உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், உதிரி பாகங்களின் விலை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், வங்கிக் கடன்கள் மற்றும் குத்தகை அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய சேவைக் கட்டணங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு, எரிபொருளுக்கு மாத்திரமே பணம் செலுத்த முடிகிறது என்றும், வங்கிக் கடன் அல்லது குத்தகைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
டீசல் சலுகைகளை அரசாங்கம் வழங்கத் தவறினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேலையின்மைக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்க் கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதுடன், கொரோனா தொற்று நோயால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே உடனடியாக சலுகைகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை